Published : 26 Jul 2015 01:14 PM
Last Updated : 26 Jul 2015 01:14 PM

பாலாறு: 120 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத தமிழகத்தின் குரல்

நதிகளின் பிறப்பிடம் தங்கள் பகுதியில் இருப்பதால், கிடைக்கின்ற மொத்த தண்ணீரும் தங்களுக்கே என சொந்தம் கொண்டாடுகிறது கர்நாடகம். இந்த பிரச்சினை இன்று நேற்று தொடங்கி நடக்கவில்லை. கிட்டத்தட்ட 120 ஆண்டு களுக்கும் மேலாக தொடர்கிறது.

மைசூர், மெட்ராஸ் ராஜ்ஜியங்கள் இடையில் பெண்ணை யார், காவிரி, பாலாறு, கிருஷ்ணா படுகை நதிநீர் பங்கீடு மற்றும் நீர்பாசன ஏரிகளை புனரமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் 1892-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் கையெழுத்தானது.

பிரிட்டிஷ் இந்தியாவில் மைசூர்-மெட்ராஸ் மாகாணம் இடையில் ஏற்பட்ட இரண்டாவது நதிநீர் ஒப்பந்தம் இது. முதலாவது ஒப்பந்தம் முல்லைபெரியாருக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 1886 அக்டோபர் 29-ம் தேதி கையெழுத்தானது. மைசூர்-மெட்ராஸ் இடையிலான நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி பயன்பாட்டில் இருக்கும் நீர்பாசனத் திட்டங்களை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும் 1892-ம் ஆண்டு ஒப்பந்தம் வழி செய்தது. மேலும், நதியின் கடைசி பகுதி ராஜ்ஜியத்தின் அனுமதி இல்லாமல், நதியின் மேல் பகுதி ராஜ்ஜியங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்ற விதியை அறிமுகம் செய்தார்கள். 1892 ஒப்பந்தப்படி மைசூர்-மெட்ராஸ் ராஜ்ஜியங் கள் இடையிலான நதிகள் மற்றும் கிளை நதிகள் என பட்டியலிடப்பட்ட 15 இனங்களில் 8-வது இடத்தில் பாலாறு உள்ளது.

அப்போதைய மைசூர் ராஜ்ஜியமும் தற்போதைய கர்நாடக அரசும் 1892-ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை வெறும் காகிதமாகவே நினைக்கின்றன. ஒப்பந்தத்தை மீறியே குறுக்கு வழியில் செயல்பட்ட மைசூர் ராஜ்ஜியம் பாலாறு வழித்தடத்தில் புதிய ஏரிகளை கட்டியதுடன் பயன்பாட்டில் இருந்த ஏரிகளின் கரைகளை உயர்த்தி, மதகுகளின் உயரத்தையும் கூட்டிக்கொண்டே சென்றது. பெயரளவுக்கு பாசன பரப்புகளின் அளவை குறைத்துக் காட்டப்பட்டது.

1892-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு மைசூர் ராஜ்ஜியத்தின் விதிமீறல்களால், நதி களின் கீழ்படுகையில் வசித்த மக்கள் சந்தித்த சிரமங்கள் பின்னாளில்தான் தெரியவந்தன. 1925 முதல் 1930-ம் ஆண்டுகளில் வழக்கமாக பாலாற்றில் ஓடிவந்த வெள்ளத்தின் அளவு வெகுவாக குறைந்தது. இதற்கான காரணத்தை தேடியபோது மைசூர் ராஜ் ஜியத்தின் அப்பட்டமான விதிமீறல் வெளிச் சத்துக்கு வந்தது. ஒப்பந்தத்தை மீறி மைசூர் சமஸ்தானத்தின் செயல்பாடுகள் குறித்த மெட்ராஸ் அரசாங்கம் எழுப்பிய கேள்விகள் அன்றைய மத்திய அரசால் கண்டுகொள்ளப் படவில்லை. கடந்த 120 ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்வதுதான் சோகம்.

விவசாயிகள் மாநாடு

பாலாற்று நீர்பிடிப்பு பகுதியில் தேக்கி வைத்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்க மைசூர் அரசுக்கு மனமில்லை. பேத்த மங்கலாவில் தண்ணீர் திறந்தால்தான் தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. பாலாற்றை நம்பியிருந்த வடாற்காடு, செங்கல்பட்டு ஜில்லா விவசாயிகள் பாலாற்று நீருக்காக காத்திருந்தார்கள்.

1954-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வடாற் காடு, செங்கல்பட்டு ஜில்லா விவசாயிகளின் கூட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் அன்றைய சென்னை மாகாண அரசுக்கு விவசாயிகளின் பிரதிநிதியான ஏ.எஸ்.அய்யங்கார் கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய கடிதத்தில், குறிப்பிட்ட தகவல் கவனத்துக்குரியது.

கஞ்சித் தொட்டி திறப்பு

‘பாலாற்றின் நீர் முழுவதும் மைசூர் ராஜ்ஜியத்தின் நீர் பாசனத்துக்காகவே நிறுத்தப்படுகிறது என்ற உண்மை இன்று தெரிந்துவிட்டது. ஐக்கிய இந்தியா ஏற்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையில் ஏன் திருத் தப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பாலாற்றின் மழை நீரும், ஊற்று நீரும் குறைந்த நிலையில் விவசாய வேலைக்காக பாலாற்றை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இதர இடங் களுக்கு குடியேறும் நிலையும், கஞ்சித் தொட்டி திறந்து கையேந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்காக இந்திய சர்க்கார் முக்கூட்டு மாநாடு ஏற்பாடு செய்து பாலாற்று நீரை பங்கீட்டு செய்ய புதிய ஏற்பாட்டை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கு விசேஷ பொறுப்பு உள்ளது. 1892 உடன்படிக்கையின்படி இரண்டு சர்க்கார் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இரண்டு சர்க்காரால் ஏற்கும் மத்தியஸ்தர் அல்லது இந்திய அரசாங்கத்தின் மூலம் தீர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். எனவே மத்திய சர்க்கார் விரைந்து செயல்பட வேண்டும்’என எழுதப்பட்டிருந்தது.

பாலாறு பயணிக்கும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x