Published : 29 May 2015 10:20 AM
Last Updated : 29 May 2015 10:20 AM
பலங்கள்:
+ கடுமையாக உழைப்பது, தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் அதற்கு இணையான உழைப்பை வாங்குவது.
+ கட்சியிலும் ஆட்சியிலும் அசைக்க முடியாதவராகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருப்பது.
+ தேர்தல் வெற்றிக்குப் பின் சுருங்கிவிடாமல், பொதுமக்கள் தொடர்பைத் தொடர்ந்து விரித்துக்கொண்டே செல்வது. பொதுக்கூட்ட மேடைகள் மட்டும் அல்லாமல், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது.
+ ஆங்கிலத்தில் சரளம் கிடையாது என்றாலும், தொழில்நுட்ப உதவியுடன் தடையில்லாமல் பேசுவது, உலகத் தலைவர்களுடன் நல்ல தொடர்பை வளர்த்தெடுப்பது.
+ ஏனைய கட்சிகள் / தலைவர்கள்போல அல்லாமல், இந்து நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளிப்பது. அதன் வாயிலாகப் பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வது.
+ அயல்வாழ் இந்தியர்களோடு கூடுதல் நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது. நாடு எப்போதும் அவர்களுக்குத் துணையிருக்கும் எனும் நம்பிக்கையை உருவாக்கியிருப்பது. ஏமன், நேபாள மீட்பு நடவடிக்கைகள் ஓர் உதாரணம்.
+ நாட்டின் பொருளாதாரத்தை முன்னின்றும் அரசியலைப் பின்னின்றும் இயக்கும் தொழில் துறையின் ஏகபோகப் பிரதிநிதியாகத் தன்னை நிறுவிக்கொண்டிருப்பது!
பலவீனங்கள்:
-- அதிகாரக் குவிப்பு. ஆட்சியில் எல்லாவற்றிலும் பிரதமர் அலுவலகத் தலையீடு என்றால், கட்சியில் எல்லாவற்றையும் தீர்மானிப்பவராக அமித் ஷா உருவெடுத்திருக்கிறார்.
-- கட்சியிலும் ஆட்சியிலும் ஆலோசனை சொல்வதற்கேற்ற மூத்தவர்களும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் அணிச் செயல்பாடு கலாச்சாரமும் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது.
-- நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆர்வமற்றவராகப் பிரதமர் இருப்பதும் அவசரச் சட்டங்களின் அரசாக அரசாங்கம் இருப்பதும்.
-- மோடியின் பெரிய வார்த்தைகள் / வாக்குறுதிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பட்ஜெட்டோ திட்டங்களோ இன்னும் தாக்கல் செய்யப்படாதது.
-- காவிமயமாக்கல். கூடவே, சகாக்களின் வெறுப்பு அரசியல் அனுமதிக்கப்படுவது.
-- முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சமய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் காட்டிக்கொள்ளக்கூட விரும்பாதவராகத் தன்னைக் காட்டிக்கொள்வது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லாத ஒரே பிரதமர் என்பது ஓர் உதாரணம்.
-- தொழில் வளர்ச்சியின் பெயரால், விவசாயிகள், தொழிலாளர்கள் நல விரோத அரசு எனும் பெயரை மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்துக்கொண்டிருப்பது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT