Last Updated : 01 Apr, 2019 07:59 AM

 

Published : 01 Apr 2019 07:59 AM
Last Updated : 01 Apr 2019 07:59 AM

ஏமாற்றிய மறுவாக்கு எண்ணிக்கை!

வாக்குச்சீட்டு காலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் ஆணையத்துக்குத் தலைவலியான விஷயம். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈவிஎம்) வந்த பிறகு மறுவாக்கு எண்ணிக்கை முன்பைவிட எளிதாகிவிட்டது. அதேசமயம், ஈவிஎம் கொண்டுவரப்பட்ட பின்னர், மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தேர்தல் ஆணையம் அவ்வளவு எளிதில் ஆணையிடுவதுமில்லை.  தமிழகத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அப்பாவு, மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகினார். இதேபோல காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த விசிக தலைவர்

தொல்.திருமாவளவனும் மறுவாக்கு எண்ணிக்கை கோரினார். ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.அதேவேளையில், கடந்த டிசம்பர் மாதம் மிசோரம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை விஷயத்தில் சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியது. டுவால் தொகுதியில் மிசோ தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட லால்சந்தாமா ரால்டி என்ற வேட்பாளர் 5,207 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். 5,204 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எல். பியான்மாவியா  தோல்வியடைந்தார். மூன்றே ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்,  மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரித் தேர்தல் ஆணையத்தை அணுகினார். மறுப்பேதும் சொல்லாமல் தேர்தல் ஆணையமும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உடனே உத்தரவிட்டது. எனினும், மறுவாக்கு எண்ணிக்கை நடந்தபோது, அதே மூன்று ஓட்டுகள் வித்தியாசத்தில் பியான்வியாமா தோல்வியடைந்தது உறுதியானது. எப்படியும் மறுவாக்கு எண்ணிக்கையில் மாறுபட்ட முடிவு கிடைக்கும் என்று காத்திருந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x