Last Updated : 07 Apr, 2019 08:57 AM

 

Published : 07 Apr 2019 08:57 AM
Last Updated : 07 Apr 2019 08:57 AM

இப்ராஹிம் சுலைமான் சேட் தென்னகத்திலிருந்து ஒரு முஸ்லிம் குரல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இப்ராஹிம் சுலைமான் சேட் (1922-2005) கேரளத்தின் மஞ்சேரி  மக்களவைத் தொகுதியிலிருந்து 1977, 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளிலும் பொன்னானி தொகுதியிலிருந்து 1991-லும் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்ராஹிம் பெங்களூரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் முகம்மது சுலைமான் சேட் மைசூரைச் சேர்ந்தவர்.  தாய் ஸைனப் பாய் கேரளத்தின் தெள்ளிச்சேரியைச் சேர்ந்தவர். தனது 15 வயதில் தந்தையை இழந்த இப்ராஹிம், கேரளத்துக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார். பிறகு, பெங்களூர் திரும்பி பொருளாதாரம், அரசியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டம் படிக்க விரும்பினார்; ஆனால், குடும்பச் சூழல் இடம் தரவில்லை. பெங்களூரில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு, அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அரசியலில் ஈடுபாடு இருந்ததால் ஆசிரியர் பணியில் தொடர முடியவில்லை. அவரது சொல்வன்மை, நேர்மை காரணமாக மக்களிடையே பெருமதிப்பு பெற்றார்.

அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸ்-இ-முஷாவரத், இந்திய தேசிய லீக் ஆகிய அமைப்புகளை நிறுவினார் இப்ராஹிம். அனைத்திந்திய பாலஸ்தீன மாநாடு என்ற அமைப்பையும் உருவாக்கினார். அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட  வாரியத்தின் நிறுவன உறுப்பினராகச் செயல்பட்டார். 1992-ல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய மில்லி பேரவையின் முதல் தலைவர். மத்திய ஹஜ் குழு, ஹஜ் ஆலோசனை கவுன்சில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மன்றம், மத்திய வக்ஃப் கவுன்சில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர் என்று பல பொறுப்புகளை வகித்து முஸ்லிம் சமுதாயத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் இப்ராஹிம் சுலைமான் சேட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x