Last Updated : 30 Aug, 2018 09:29 AM

 

Published : 30 Aug 2018 09:29 AM
Last Updated : 30 Aug 2018 09:29 AM

69% இடஒதுக்கீடு: ஒன்பதாவது அட்டவணைக்கு மதிப்பளிக்க வேண்டும்!

69% இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட இடைக்கால வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், இது தொடர்பான மூல வழக்கை நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பின்வரும் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

1. உச்ச நீதிமன்ற விசாரணையைத் தடை செய்யக் கோரி உடனடியாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். 69% இடஒதுக்கீடு தொடர்பாகத் தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதை நீதிமன்றம் விசாரிப்பது சரியல்ல. இதை வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

2) ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக இருந்தால் அவற்றை நீதிமன்றம் சீராய்வு செய்யலாம் என பத்து ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அறிவித்தது.

அதன் மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தைவிட, தனக்கே அதிக அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் முடிவுசெய்துகொண்டது. நாடாளுமன்ற ஜனநாயகமே அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்ற கோட்பாட்டுக்கு இது எதிரானது.

அந்தத் தீர்ப்பை ரத்துசெய்ய அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

அதில் அங்கம் வகித்த கட்சிகளும் அதை வலியுறுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் நிலையில், இப்போதாவது இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x