Published : 21 Jul 2018 09:31 AM
Last Updated : 21 Jul 2018 09:31 AM

வாசிப்பை வளர்த்தெடுப்பதே நோக்கம்!- எஸ்.செளந்தரராஜன் பேட்டி

வெற்றிகரமான நான்காவது ஆண்டு புத்தகக் காட்சியைத் தொடங்கியிருக்கிறது கொடிசியா. கோவை மக்களிடையே புத்தக வாசிப்பின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தப் புத்தகக் காட்சியை லாப நோக்கமின்றி நடத்திவரும் கொடிசியாவின் நிர்வாகிகளில் ஒருவரும், புத்தகக் காட்சியின் தலைவருமான எஸ்.செளந்தரராஜனுடன் ஒரு குறும் பேட்டி:

இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் சிறப்புகள் என்னென்ன?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியபோது 150 அரங்குகள். இந்த முறை 265 அரங்குகளை அமைத்திருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகம், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பிறமாநிலங்களை சேர்ந்த 40 பிற மொழிப் பதிப்பாளர்கள் அரங்கம் அமைத்திருக்கிறார்கள். புதுவையிலிருந்து மட்டும் 130 தமிழ்ப் பதிப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விற்பனை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் 60 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தது பெரும் நம்பிக்கையைத் தந்தது. ரூ.2.5 கோடிக்குப் புத்தக விற்பனை நடந்தது. இந்த ஆண்டு 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன். விற்பனை ரூ.3 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறேன்!

கோவையில், வாசிப்பை வளர்த்தெடுக்க வேறு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

சென்னைக்கு அடுத்தபடியாகப் புத்தகக் காதலர்களைக் கொண்ட கோவையில், அந்த ஆர்வம் படிப்படியாகக் குறைந்துவந்தது. புத்தகக் காட்சி அந்த ஆர்வத்தை மீண்டும் விதைத்திருக்கிறது. இதைத் தவிர, வாசிப்பைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கொண்டுசெல்வதிலும், தொழிற்சாலைகளில் நூலகங்கள், அறிவுக்கேணி போன்ற பிரிவுகளை ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது கொடிசியா!கா.சு.வேலாயுதன்எஸ்.செளந்தரராஜன் பேட்டிவாசிப்பை வளர்த்தெடுப்பதே நோக்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x