Last Updated : 05 Jul, 2018 09:12 AM

 

Published : 05 Jul 2018 09:12 AM
Last Updated : 05 Jul 2018 09:12 AM

சந்தைக்கு வருமா செயற்கை இறைச்சி?

கா

ல்நடைகளைக் கொல்லாமல், ஆய்வுக்கூடத்தில் இறைச்சி தயாரிக்கும் தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மீன்கள் இல்லாமலேயே மீன் வறுவல், கோழிகளைக் கொல்லாமலேயே ‘சிக்கன்’ உணவு என்று செயற்கை முறையில் அசைவ உணவுகளைத் தயாரிக்க முடியும் என்று சோதனை முறையில் செய்துகாட்டியிருக்கின்றன அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்.

சரி, எப்படித் தயாரிக்கிறார்கள் இந்த இறைச்சியை? மாட்டிறைச்சியைப் பொறுத்தவரை உயிருள்ள ஒரு மாட்டின் ஸ்டெம் செல் ஒன்றை எடுத்து, அதனுடன் அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட் உள்ளிட்டவற்றைச் சேர்க்கிறார்கள். இதன் மூலம், அந்த செல் வளரத் தொடங்குகிறது. தசை நார்களுடன் தசைச் செல்கள் நன்கு வளர்ச்சியடைந்ததும் அது ஒரு இறைச்சித் துண்டாகிவிடுகிறது. “அசல் இறைச்சிக்குரிய சுவை இல்லாவிட்டாலும், சாப்பிட நன்றாகவே இருக்கிறது” என்கிறார்கள் சுவைத்துப்பார்த்தவர்கள்.

2000-களின் தொடக்கத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் தொடங்கிய நிலையில், இன்றைக்கு சோதனை அடிப்படையில் இதுபோன்ற இறைச்சித் துண்டுகளைத் தயாரிப்பதில் ஆய்வாளர்கள் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஜஸ்ட்’ எனும் நிறுவனம், 55 ஆராய்ச்சியாளர்கள், 130 பணியாளர்களுடன் செயற்கை முறையில் கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி தயாரிக்கும் பணியில் தீவிர மாக இறங்கியிருக்கிறது. 2018 இறுதியில், செயற்கை இறைச்சியை முதன்முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இதன் தயாரிப்புச் செலவுதான் மிகமிக அதிகம். 2012-ல் செயற்கை இறைச்சியைப் பயன்படுத்தி ‘பர்கர்’ தயாரிக்க ஆன செலவு ரூ.2 கோடி. எனினும், காலப்போக்கில் தயாரிப்புச் செலவு குறையும் என்றும் செயற்கை இறைச்சி ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x