Published : 10 Jul 2018 08:34 AM
Last Updated : 10 Jul 2018 08:34 AM
“வே
லை பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். குழந்தை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்” என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், தென் கொரிய அதிபர் மேன் ஜே. உலகிலேயே குழந்தைப் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது தென் கொரியாவில்தான். தென் கொரியப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் ஆண்டுக்கு 1.05 தான். மக்கள்தொகையைத் தக்கவைப்பதற்குத் தேவைப்படும் 2.1 எனும் விகிதத்துடன் ஒப்பிட இது மிகமிகக் குறைவு. வேலைப் பளு, பெண்களுக்குக் குறைவான சம்பளம், கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி என்று பல்வேறு காரணங்களால், தென் கொரிய இளம் தலைமுறையினரிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை நாடான ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் போன்ற பிரச்சினை தென் கொரியாவுக்கு இல்லை. ஆனால், தென் கொரியர்கள் முதுமையடைந்துவரும் வீதம் அதிகம். மனிதவளம் தொடர்பான இந்தப் பிரச்சினை, நாட்டின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தென் கொரியா உணர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் புதிய பிரச்சினையை எதிர்கொள்வதில் தென் கொரிய அரசு தீவிரமாக இறங்கியிருக் கிறது.
ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைத்து, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குவதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. வாரத்துக்கு 68 மணி நேரம் என்று இருக்கும் பணி நேரத்தை, 52 மணி நேரமாகக் குறைக்கும் யோசனையும் அரசுக்கு உண்டு. ஆனால், இதெல்லாம் பெயரளவில்தான் சாத்தியமாகும் என்றே அரசு, தனியார் ஊழியர்கள் பலரும் கருதுகிறார்கள்.
பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் திணிக்கப்படும் கொரியச் சமூகத்தில், அவற்றுக்கு எதிரான மனநிலை இளம் தலைமுறையினர் மத்தியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் எழுந்திருப்பதில் வியப்பில்லை. கல்வியறிவில் ஆண்களை விட அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கும் சூழலில், ஆண்களை ஒப்பிட பெண் களுக்கான சம்பளம் 63%தான். இதனால், அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இளம் பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் பேறுகால விடுப்பில் சென்றுவிடுவார்கள் என்பதற்காகவே, அவர்களைத் தற்காலிக ஊழியர்களாகவே பல நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இதுவும் பெண்கள் மத்தியில் பெரும் அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. முந்தைய தலைமுறையின ரைப் போல், குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்றில்லாமல், படிப்பு, வேலை என்று இருக்கும் பெண்கள் தங்கள் எதிர்காலம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார்கள்.
தவிர, அலுவலகப் பணித் திறனில் சிறந்து விளங்கும் பல பெண்கள், வீட்டு வேலைகளுக் கான திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆண்கள் கருதுவதாக கொரியத் திருமண மையங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வறிய நிலையில் உள்ள ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களை வரவழைத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் அதிகரித்திருக்கிறார்கள். மேலும், இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 10.5% ஆக இருப்பது இன்னொரு பிரச்சினை. 25 முதல் 34 வயது வரையிலான இளைஞர்களில், பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை 69%. ஆனால், இவர்களுக் குத் தகுந்த வேலை கிடைப்பதில்லை. சரியான வேலை கிடைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய பலர் தயங்குகிறார்கள்.. சிலர் தவிர்த்து விடுகிறார்கள். இவையெல்லாம் தென் கொரியா வில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைவதற்கு முக்கியக் காரணங்கள்.
கருவுறுதலுக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் தம்பதியினருக்கு நிதியுதவி வழங்குவது, அவர்களுக்கு வாரம் மூன்று நாட்கள் விடுப்பு வழங்குவது, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பத்துக்கு அதிக சலுகைகள் வழங்குவது என்று அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் முக்கியமானவை. எனினும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு முடிவுசெய்வதை கொரியப் பெண்கள் விரும்பவில்லை; மாறாக, வாழ்க்கைச் சூழலை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT