Last Updated : 26 Dec, 2024 06:18 AM

1  

Published : 26 Dec 2024 06:18 AM
Last Updated : 26 Dec 2024 06:18 AM

ப்ரீமியம்
எளிமையின் சிகரம்! | இரா.நல்லகண்ணு நூற்றாண்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவர், விடு​தலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​வின் நூற்​றாண்டு இன்று தொடங்​கு​கிறது. எவருக்​கும் கிட்டாத அரிய வாய்ப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26​தான் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​வின் பிறந்​த​நாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் தோழர் இரா.நல்​ல​கண்​ணு​தான்.

காந்​தி​யத்​திலிருந்து கம்யூனிஸத்​துக்​கு... தூத்​துக்​குடி மாவட்டம் திரு​வை​குண்​டத்​தில் இராம​சாமி - கருப்​பாயி தம்ப​திக்கு மூன்​றாவது மகனாகப் பிறந்​தார் நல்ல​கண்ணு. பள்ளி​யில் படிக்​கின்​ற​போதே, ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமை​யின் மோகம்?’ என்ற மகாகவி பாரதி​யின் பாடல் வரிகளுக்​கேற்ப தேச விடு​தலையே தனது மூச்​சென்​றிருந்​தார். தேசப்​பிதா காந்​தி​யின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x