Published : 24 Dec 2024 03:34 AM
Last Updated : 24 Dec 2024 03:34 AM
மார்கழி பலருக்கும் பிடித்த ஒரு மாதம். பூக்களுக்கும் புற்களுக்கும்கூட பனியின் வெண்குடையை மார்கழி மகுடமாக்கி இருக்கும். எனினும் 1968களுக்குப் பின் காவிரிப்படுகையில் பிறந்தோருக்கு மாதங்களில் மார்கழியை ரசிக்க முடியவில்லை. கார்த்திகையில் சுடலை கொளுத்திய தீபத்தின் திரிநாக்குகள் அணையும் முன் மார்கழியில் கீழவெண்மணி தீக்குளித்தது.
டிசம்பர் 25 என்பது கொண்டாட்டங்களின் பேரின்பப் பெருவிழாவாகப் பொதுப்புத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழவெண்மணியில் நிகழ்ந்த துயரத்தை நினைப்பவர்களால் இந்தத் தேதியில் கொண்டாட்ட மனநிலைக்குச் செல்லவே முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT