Published : 11 Dec 2024 06:19 AM
Last Updated : 11 Dec 2024 06:19 AM
பாரதி கடையத்தில் வாழ்ந்தபோது ஒரு நாள், அங்கிருந்த ராமசாமி கோயில் வாசலில் மாலை ஐந்து மணிக்குத் தாம் பிரசங்கம் செய்ய இருப்பதாகவும், அந்த நேரத்தில் கிராமத்தார் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால், கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த பெண்களைத் தவிர, ஒருவரும் வரவில்லை.
அப்போது, பாரதியாரிடம் பேச வரும் முகமதிய நண்பர்கள் கடையத்துக்கு அருகேயிருந்த பொட்டல்புதூருக்கு வந்து பேசுமாறு அழைத்தனர். அதேவேளை, “எங்களவர்களுக்கு உங்கள் பெருமைகள் தெரியாது. தவிர, நீங்கள் ஹிந்துவாக வேறு இருப்பதால் உங்கள் போதனைகளை அவ்வளவு சகஜமாக ஏற்றுப் பொறுமையாகக் கேட்க மாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT