Last Updated : 10 Dec, 2024 06:13 AM

 

Published : 10 Dec 2024 06:13 AM
Last Updated : 10 Dec 2024 06:13 AM

ப்ரீமியம்
அம்பேத்கரும் ஒரு கோப்பைத் தேநீரும்!

கொட்டும் மழைக்கு இடையேயும், குளிரும் பனிக்கு மத்தியிலும் ஒரு கோப்பைத் தேநீர் எவ்வளவு இதமானதோ, அதே போல்தான் கடும் வெயிலில் பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு இடைவேளையில் கிடைக்கும் தேநீரும். இந்தியாவின் பல ஊர்களின் தெருக்களில் நின்று எந்தத் தயக்கமும் இல்லாமல் ரசித்துத் தேநீர் அருந்தியிருக்கிறேன். ஆனால், எங்கள் தஞ்சை மாவட்டக் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரை ஓரம் உள்ள சிறு கிராமத்தில், மழை பெய்த அந்த அதிகாலையில், ஒரு மடக்கு தேநீரைக்கூடக் குடிக்க முடியாமல் வெளியேறினேன். காரணம், அங்கு சூழ்ந்திருந்த சாதியெனும் வெம்மை.

தார்மிகக் கடமை: “இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை இங்கு இருக்​கிறது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எங்களுக்கும் கோபம் வந்தது. பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து​கொண்​டோம். ஊரில் டீ குடிப்​பதையே நிறுத்​தி​விட்​டோம். முடி வெட்டு​வதும் வெளியூரில்​தான். இந்த ஆற்றங்​கரையோரம் உள்ள பெரும்​பாலான கிராமங்​களில் இதுதான் நிலை. நாங்கள் இந்தப் பகுதி​களில் 10 சதவீதத்​துக்கும் குறைவாகத்தான் இருக்​கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x