Published : 01 Dec 2024 08:03 AM
Last Updated : 01 Dec 2024 08:03 AM
தமிழ்நாட்டின் முப்பெரும் தேவாரப் பெருமக்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் சுந்தரர். சிவபெருமானைப் போற்றி அவர் பாடிய நூறு பதிகங்களே ஏழாம் திருமுறையின் உள்ளடக்கம். முதல் ஆறு திருமுறைகளைப் பாடிய சம்பந்தரும் அப்பரும் மண்ணுலகினர். சுந்தரரோ விண்ணுலகில் வாழ்ந்து, செய்த பிழைக்காக மண்ணுலக வாழ்வுக்கு அனுப்பப்பட்டவர். அவரது வாழ்க்கையை விரித்துரைக்க சேக்கிழாருக்கு உதவிய எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளில் ராஜராஜீசுவரத்துத் தூரிகைப் படப்பிடிப்பு முதன்மையானது எனலாம்.
‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்கிற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் ராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய ராஜராஜீசுவரம், தமிழ்நாட்டுக் கட்டிடக் கலை வரலாற்றில் ஒரு மைல் கல். கருவறையைச் சுற்றி இரண்டு சுவர்களும் அவற்றுக்கு இடைப்பட்டு நடைவழியும் கொண்டு உருவான சாந்தார விமானங்களில் ராஜராஜீசுவரம் தனித்தன்மை கொண்டது. இங்கு மட்டுமே அந்த நடைவழி அமைந்துள்ள விமானத்தின் இருதளங்களிலும் கலைப் படைப்புகளைப் பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள கீழ்த்தள நடைவழியில் சோழ, நாயக்கர் கால ஓவியங்களுடன் கூரைப் பகுதியில் ஆடற்சிற்பங்களும் உள்ளன. மேல்தள நடைவழி பரதரின் நாட்டியச் சாத்திரம் குறிப்பிடும் 108 ஆடற்கரணங்களில் 81க்கான சிற்ப வடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT