Published : 28 Nov 2024 06:19 AM
Last Updated : 28 Nov 2024 06:19 AM
கருத்துச் சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் அனுமதிக்கும் ‘தலையிடாமைச் செயல்’ அல்ல; தணிக்கையையும் பொதுவெளியில் கருத்துகள் விவாதிக்கப்படுவதற்கான தடைகளையும் விலக்குவதற்கான கோட்பாடு. இதைப் புரிந்துகொள்வது அவசியம். அண்மையில், எக்ஸ் (முன்பு டிவிட்டர்) தளத்தில் தனது அதிகாரபூர்வக் கணக்குகளிலிருந்து பதிவுகளை வெளியிடுவதை நிறுத்த பிரிட்டனைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ முடிவு செய்துள்ளது.
பிரிட்டனின் பாரம்பரிய ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை மிகுந்த கவனத்துடன் வாசிக்க வேண்டும். ‘நாங்கள் நீண்ட காலமாகப் பரிசீலித்துவந்த முடிவு இது. தீவிர வலதுசாரி சதிக் கோட்பாடுகள், இனவாதக் கருத்துகள் உள்பட இந்தத் தளத்தில் அதிகமாக முன்னிறுத்தப்படும் உள்ளடக்கம் பெரும்பாலும் உளைச்சல் அளிப்பதாகவே இருந்துவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT