Last Updated : 25 Nov, 2024 06:13 AM

 

Published : 25 Nov 2024 06:13 AM
Last Updated : 25 Nov 2024 06:13 AM

ப்ரீமியம்
அன்றாடமும் நிலைத்தலும் | அன்றாடமும் சமூக வாழ்வும் - 6

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

மனித உடலின் நரம்பு மண்டலத்​தால், செயல்களை மெய்நிகர் பிம்பங்​களாகப் பிரித்துச் சேகரித்​துக்​கொள்வது சாத்தியமானதால், ஒவ்வொரு உடலும் புலன்கள் தரும் தகவல்களை நினைவுசேகரமாக மாற்றிக்​கொண்டு, அதன் உதவியுடன் செயல்​படுவது சாத்தி​ய​மானது. இந்தப் புலன் அனுபவங்கள் பிற மனித உயிரி​களுக்கும் பொதுவாக அமைவதால், மனிதர்​களுக்​கிடையே அனுபவங்​களைப் பகிர்ந்​து​கொள்​வதும் சாத்தி​ய​மானது. அவர்களிடையே மொழி தோன்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x