Published : 24 Nov 2024 07:13 AM
Last Updated : 24 Nov 2024 07:13 AM
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரான கி.ராஜநாராயணன், ‘ஜடாயு’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். தொன்மக் கதையான ராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பறவை ‘ஜடாயு’. கழுகுகளின் அரசன் என்று ஜடாயு அழைக்கப்படுகிறது.
ஒருமுறை தசரதன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது அவரது உயிரை ஜடாயு காப்பாற்றியது. அன்றிலிருந்து தசரதனுக்கு ஜடாயு நெருக்கம். காலம் ராமனையும் காட்டுக்கு அனுப்பியது. தண்டகாரண்யத்தில் ஜடாயுவைச் சந்திக்கிறார் ராமன். இருவரும் தத்தமது வரலாறுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். தசரதன் மறைவுக்காக ஜடாயு வருந்துகிறது. உயிர் துறக்கவும் துணிகிறது. ஏற்கெனவே ஒரு தந்தையை இழந்துவிட்டேன்; உங்களையும் இழக்க விரும்பவில்லை என்கிறார் ராமன். ‘நீங்கள் மூவரும் காட்டில் இருக்கும்வரை உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பேன்; பின்னர், உயிர் துறப்பேன்’ என்கிறது ஜடாயு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT