Published : 11 Nov 2024 06:19 AM
Last Updated : 11 Nov 2024 06:19 AM
இந்தியாவின் முதல் ‘அனலாக் விண்வெளிப் பயணத்’துக்கான ஏற்பாடுகள், லே நகரின் அருகே லடாக்கில் நிறுவப்பட்டுவரும் விண்வெளிப் பயண ஒத்திகை நிலையத்தில் தொடங்கப்படவிருக்கின்றன. இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயண மையம், விண்வெளிக் கட்டிடக் கலை நிறுவனம், ஆகா விண்வெளி ஸ்டுடியோ (Aaka Space Studio), லடாக் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஒத்திகை நிலையத்தை உருவாக்கிவருகின்றன.
அனலாக் விண்வெளிப் பயணம் என்றால்? - ரயிலில் சில நாள்கள் பயணம் செய்யும்போது நமக்கு வேண்டிய உணவு முதலியவற்றை எடுத்துச் சென்றாலும், இடையே அத்தியாவசியமாக ஏதாவது தேவை ஏற்பட்டால் வழியில் ரயில் நிலையத்தில் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், ஒரு சில வாரங்கள் செல்லும் நிலவுப் பயணமாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் 400 முதல் 750 நாள்கள் ஆகும் செவ்வாய்ப் பயணமாக இருந்தாலும் சரி, இடையே எந்தத் தேவைக்கும் பூமியை நம்பியிருக்க முடியாது. வெறும் தகவல் தொடர்பு மட்டுமே பூமியோடு சாத்தியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT