Published : 08 Nov 2024 06:18 AM
Last Updated : 08 Nov 2024 06:18 AM

ப்ரீமியம்
ஆக்கிரமிப்பை அகற்றாமல் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க முடியுமா?

வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்​கு​வதற்கு முன்பே மழையால் தமிழ்​நாட்டில் குளம், ஏரிகளின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்​படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, மக்களுக்குப் பெரும் சிரமத்தை வெள்ளநீர் ஏற்படுத்​தி​விட்டது. ஏறக்குறைய 347 டிஎம்சி நீரை சேமிக்​கக்​கூடிய 41,127 குளம், ஏரிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் வெள்ளச் சேதங்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் தொடர்​கின்றன? நீர்நிலைகளில் ஏற்பட்​டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு​களைக் குறைக்க முடியுமா?

குளங்​களின் பயன்கள்: பல நூற்றாண்​டு​களுக்கு முன்னால் உருவாக்​கப்பட்ட குளங்கள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி​செய்​ததோடு, மழை வெள்ளப் பாதிப்பு​களையும் குறைத்து​வந்தன. நீர்ப்​பிடிப்புப் பகுதியில் மட்டுமல்​லாமல், மழைநீரைக் குளங்களுக்குக் கொண்டு ​செல்லும் வாய்க்​கால்​களும், நீர் சேமிப்புப் பகுதி​களிலும் அரசு நிறுவனங்​களாலும் தனிமனிதர்​களாலும் மேற்கொள்​ளப்​படும் ஆக்கிரமிப்​பாலும், நீர்நிலைகளை ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணங்​களாலும், குளங்​களின் நீர்க் கொள்ளளவு பெரிதும் குறைந்​து​விட்டது. இதனால், சிறிய மழையளவைக்​கூடத் தாக்குப்​பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்​து​விடு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x