Published : 26 Jun 2018 09:22 AM
Last Updated : 26 Jun 2018 09:22 AM
‘பெண்மனசு ஆழமென்று... தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத்தான் தெரியும்?’
பாங்கனுக்குத் தெரியும் என்கிறது சங்க இலக்கியம். பாங்கன், தலைவனின் தோழன். திருமணத்துக்கு முந்தைய களவொழுக்கத்தில் காதல் தூதுவன். கற்பொழுக்கத்தில் திசைமாறிச் செல்கை யில் நல்வழி நடத்துபவன். தலைவி தன் கருத்தைத் தலைவனிடம் நேரடியாகக் கூறுவது மரபு இல்லை. பாங்கன் வழியாகவே தலை வனுக்கு உணர்த்துவாள். அதுவும் குறிப்பாகத்தான். முத்து என்றால் நெய்தல். இரங்கல் நிமித்தம். முள்ளுக் கொத்து என்றால் பாலை. பிரிவின் துயரம். எனவே, தலைவியின் மனதை அறிந்த வன் பாங்கன். பெண்களின் உள்ளத்து உணர்வை விவரிக்க சங்க இலக்கியங்கள் பின்பற்றிய ஒரு மரபான உத்திதான், பாங்கன் பாத்திரம். சங்க இலக்கியம் தொடங்கி சமீப காலத் திரைப் படங்கள் வரை, கதாநாயகனையொட்டிக்கொண்டு ஒரு தோழன் வந்துபோகிறான். இருந்தாலும் இலக்கியத்தில் பாங்கனுக்கு இருந்த மதிப்பு சினிமாவில் அவனுக்கு இல்லை. சினிமாவில் அவன் வெறும் கோமாளிப் பாத்திரம். பாங்கன் நடைமுறை வாழ்க்கையிலும் இருந்தாக வேண்டும் என்பதில்லை. அப்படி இல்லாமலிருப்பது நல்லதுதான் என்றும்கூட சினிமா சொல்லிக்கொடுக்கிறது. மின்சாரக் கனவு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT