Published : 06 Nov 2024 06:23 AM
Last Updated : 06 Nov 2024 06:23 AM

ப்ரீமியம்
தலைமை மனநல மருத்துவமனை: ஏன் அரசிடமே இருக்க வேண்டும்?

சென்னை கீழ்ப்​பாக்​கத்தில் இயங்கிவரும் அரசு தலைமை மனநல மருத்​துவ​மனையின் நிர்வாகத்தில் பல போதாமைகள் இருப்பதாகக் கூறி, இருநூறு வருடங்கள் பழமையான அந்த அரசு நிறுவனத்தைத் தனியார் பொறுப்பில் மாற்று​வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறைச் செயலாளர் பரிந்துரை செய்திருக்​கிறார். அரசு மனநல மருத்​துவ​மனையின் போதாமைகளை அரசுதான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதன் நிர்வாகத்தில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது சரியல்ல.

இந்த முயற்சி நாளடைவில் அனைத்து அரசு மருத்​துவ​மனை​களும் தனியார்​மய​மாவதில் சென்று முடியும் எனச் சமூக சமத்து​வத்​துக்கான மருத்​துவர்கள் சங்கம் போன்ற மருத்​துவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்​துள்ளன. இதன் விளைவாக, அரசு மனநல மருத்​துவ​மனையின் நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்​தி​யிருக்​கிறார். உலகளவில் மனநலப் பிரச்​சினைகள் அதிகரித்து​வரும் சூழலில், ஒரு தலைமை அரசு மனநல மருத்​துவமனை ஏன் முக்கி​யத்துவம் வாய்ந்தது? அது ஏன் அரசு நிர்வாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x