Published : 06 Nov 2024 06:15 AM
Last Updated : 06 Nov 2024 06:15 AM
ஒரு குடும்பத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவின் விலையானது, வருமானத்தைவிட அதிகமாக உயர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024இல் ஒரு தனிநபரின் வருமானத்தில் பெரும் பங்கு உணவுக்காகவே செலவிடப்படுகிறது. 2023 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 அக்டோபரில் உணவுப் பொருள்களின் விலை 52% அதிகரித்துள்ளது. ஆனால், ஒருவரின் சராசரி சம்பளம் 9 முதல் 10% வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்துவரும் விலைவாசி உயர்வானது தினக் கூலித் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தைத் தனியாக நிர்வகிக்கும் பெண்கள் பொருளாதாரரீதியாகக் கூடுதல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT