Published : 11 Jun 2018 09:30 AM
Last Updated : 11 Jun 2018 09:30 AM
அ
மெரிக்காவில் பதின்மவயதினர் மத்தியில் செல்வாக்கை இழந்திருக்கிறது ஃபேஸ்புக். பியூ எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 13 முதல் 17 வயது வரையிலானோரில், 51% பேர்தான் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்திருக் கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இது 71% ஆக இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.
யூடியூப்தான் 85% பதின்மவயதினரின் விருப்பத்துக்குரிய சமூக ஊடகமாக இருக்கிறது (2015-ல் நடத்தப்பட்ட ஆய்வின்போது யூடியூப் சமூக ஊடகங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை). இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதாக 72% பேர் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்னாப்சாட்டுக்கு 69% பேரின் ஆதரவு கிடைத் திருக்கிறது. சமூக ஊடகங்கள் பதின்மவயதினரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக் கும் தாக்கத்தை அறியும் வகையிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள், சமூக ஊடகங்கள் சாதகமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது என்றோ, சாதகமோ - பாதகமோ இல்லை என்றோதான் கூறியிருக்கிறார்கள். அதேசமயம், மிரட்டல் தொனியில் பேசுபவர்கள், அவதூறு, கேலி, கிண்டல் செய்பவர்களால் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். வதந்திகள் பரப்பப்படுவதால் சமூக ஊடகங்களை வெறுப்பவர்களும் உண்டு. 24% தங்களுக்கு சமூக ஊடகங்கள் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
‘வீடியோ கேம்’ஸிலும் அமெரிக்கப் பதின்மவயதினருக்கு நாட்டம் குறையவில்லை. 83% சிறுமிகளும், 97% சிறுவர்களும் கணினி, செல்போன் என்று கேட்ஜெட்டுகளில் ‘விளையாடு’கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT