Last Updated : 02 Nov, 2024 07:49 AM

 

Published : 02 Nov 2024 07:49 AM
Last Updated : 02 Nov 2024 07:49 AM

ப்ரீமியம்
தமிழில் மருத்துவக் கல்வி: நம்பிக்கை ஒளி தரும் கலங்கரை விளக்கம்!

தமிழில் மருத்துவ அறிவியல்! தமிழ்வழியில் படித்த மருத்துவ மாணவர்கள் அந்நிய மொழியைக் கண்டாலே மிரள்வார்கள். அவர்களில் நானும் ஒருவன். மொழி புரியாமல் தேர்வுக்கான தயாரிப்புக்கு மனனம் செய்யும் நிலைமைதான் பலருக்கும் ஏற்படும். இந்தப் பின்னணியில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள ‘மருத்துவ உடற்செயலியல்’ என்னும் மருத்துவ நூல், ‘தமிழில் மருத்துவக் கல்வி சாத்தியமே!’ என்பதை உறுதிசெய்துள்ளது.

கைட்டன் (Guyton), ஹால் (Hall) எனும் இரண்டு மருத்​துவர்கள் எழுதிய முதலாண்டு மாணவர்​களுக்கான ‘Medical Physiology’ மருத்துவ நூல் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்​டிருக்​கிறது. மொழிபெயர்ப்​பதில் பல மருத்​துவர்கள் இணைந்து பணியாற்றி​யிருக்​கிறார்கள். இவர்கள் எந்தச் சூழலில் இப்பணியைச் சிரமேற்​கொண்​டார்கள் என்பது முக்கியம். நவீன மருத்​துவக் கலைச்​சொற்​களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவும் வகையில் ஒரு முழுமையான மருத்​துவக் கலைச்சொல் அகராதி தமிழில் இல்லை. மணவை முஸ்த​பாவின் ‘மருத்​துவக் களஞ்சியம் பேரகராதி’, டாக்டர் சாமி சண்முகம் தொகுத்​துள்ள ‘மருத்​துவக் கலைச்​சொற்​கள்’, சென்னைப் பல்கலைக்​கழகத்தில் இயங்கிவரும் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ வெளியிட்​டுள்ள ‘கலைச்சொல் அடைவு’, தமிழ்நாடு பாடநூல் - கல்வி​யியல் பணிகள் கழகத்தின் ‘அறிவியல் சொல்ல​க​ராதி’, ப.அருளி தொகுத்த ‘அருங்​கலைச்சொல் அகரமுதலி’, சொற்கு​வை.​காம்... இவைதான் தற்போது மருத்​துவச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவர உதவுபவை. ஆனால், இவையும் முழுமையாக இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x