Last Updated : 17 Oct, 2024 06:10 AM

1  

Published : 17 Oct 2024 06:10 AM
Last Updated : 17 Oct 2024 06:10 AM

ப்ரீமியம்
ஊகங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலை | அஞ்சலி: ஜி.என்.சாய்பாபா

“நாட்டுக்கு ஆபத்து என்கிற ஊகங்களுக்காகச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பலி கொடுக்க முடியாது” என அதிகார வர்க்கத்துக்கு அறிவுறுத்திவிட்டுத்தான், சமூகச் செயல்பாட்டாளரான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்தது. ஏழு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாய்பாபா அப்படித்தான் விடுதலையானார். பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆட்பட்டாலும் சமூகப் போராளி என்னும் நிலையிலிருந்து சிறிதும் பின்வாங்காத சாய்பாபா, அக்டோபர் 12 அன்று காலமானார்.

சாய்பாபா ஆந்திரத்தில் உள்ள அமலாபுரம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டதால், கைகளைத் தரையில் ஊன்றித்தான் இவரால் நகர முடியும்; பிற்காலத்தில் சக்கர நாற்காலியின் உதவியோடு நடமாடினார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் உயர் கல்வி பயிலும் காலத்திலிருந்தே இவர் ஈடுபட்டுவந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x