Published : 15 Oct 2024 06:13 AM
Last Updated : 15 Oct 2024 06:13 AM
புரத மடிப்புக் கட்டமைப்பை இனம் காணும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைத் தயார் செய்த மூவருக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ‘கணக்கீட்டுப் புரத வடிவமைப்பு’ (computational protein design) சாதனைக்கு டேவிட் பேக்கருக்கும், ‘புரத அமைப்புக் கணிப்புக்காக (for protein structure prediction) டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கும் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹசாபிஸ், ஜம்பர் இருவரும், செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு, ‘புரதங்களின் சிக்கலான கட்டமைப்புகளைக் கணிக்கும் ‘ஆல்ஃபாஃபோல்ட்2’ என்னும் செயற்கை நுண்ணறிவுச் செயலியை உருவாக்கினர். இந்தச் செயலியைக் கொண்டு ஒவ்வொரு புரதத்தின் மடிப்பு வடிவக் கட்டமைப்புக்களை இனம் கண்டுவிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT