Published : 14 Oct 2024 06:13 AM
Last Updated : 14 Oct 2024 06:13 AM
அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுச் சேகரம், அறிவுச் சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
இயற்கைப் பெருவெளியின் காலம் என்பது பூமியின் சுழற்சி உருவாக்கும் அன்றாடமாக இருக்க, மானுட நாகரிகங்கள் நேற்று, இன்று, நாளை என நேர்க்கோட்டில் ஒரு வரலாற்றுக் காலத்தை மொழியில், எண்ணில், குறியீட்டு அளவைகளில் உருவாக்கிக்கொள்வதைப் பார்த்தோம். மானுடத் தன்னுணர்வு அன்றாடத்திலிருந்து வரலாற்றுக் காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இடையே மற்றொரு முக்கியமான காலப் பரிமாணத்தை, இருத்தலியல் காலத்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT