Published : 11 Oct 2024 06:12 AM
Last Updated : 11 Oct 2024 06:12 AM
“பொதுவாகவே ‘வீடு’ என்பது மனிதர்கள் தங்கும் இடத்தை / இருப்பிடத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது மனிதர்களின் சமூக உள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இருக்கிறது” என்கிறார்கள் சமூகவியலாளர்களான டிப்பில், ஸ்பீக் இருவரும். இந்தியச் சமூகத்தில், அடிப்படைச் சமூக நிறுவனங்களான குடும்பங்களின் வாழ்விடங்களாகவும் வீடுகள் இருக்கின்றன.
அப்படிப்பட்ட வீடு இல்லாத மனிதர்களின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது அவசியம். அவர்களின் வாழ்க்கைச் சூழல் சிக்கலானதாக அமைய இந்த ‘வீடற்ற நிலை’ ஒரு காரணமாக இருக்கிறது. இது முக்கியமான சமூகப் பிரச்சினை. சென்னை சமூகப் பணிக் கல்லூரியின், நகர்ப்புற ஏழைகளுக்கான மையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ‘சென்னை மாநகரத்தில் வீடற்றவர்களின் நிலை’ என்கிற ஆய்வு, சென்னை போன்ற பெருநகரங்களில் வீடற்றவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT