Last Updated : 09 Oct, 2024 06:13 AM

 

Published : 09 Oct 2024 06:13 AM
Last Updated : 09 Oct 2024 06:13 AM

ப்ரீமியம்
அரசமைப்பு ஆறாம் அட்டவணை வழங்கும் சிறப்பு உரிமைகள்

ஜம்மு - காஷ்மீரிலிருந்து பிரிக்​கப்​பட்டுத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்​கப்பட்ட லடாக்,​ அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணையில் சேர்க்​கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து அங்கு ஒலித்து​வரு​கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு கொடுக்கச் சென்ற சூழலியல் செயல்​பாட்​டாளர் சோனம் வாங்சுக் தலைமையிலான குழுவினர், டெல்லி எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். இதையடுத்து, லடாக் விவகாரம் தேசிய அளவில் மீண்டும் பேசுபொருளாகி​யிருக்​கிறது. இந்தப் பின்னணி​யில், அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணை குறித்துத் தெரிந்​து​கொள்வது அவசியம்.

அட்டவணை​களின் வரலாறு: ஆங்கிலேயர்​களின் வருகைக்கு முன்பு பழங்குடி மக்கள் அனைவரும் முகலாய, சுல்தானிய மன்னர்​களின் ஆளுகைக்கு முழுமை​யாகக் கட்டுப்​பட்​ட​வர்களாக இருக்க​வில்லை. முகலாய, சுல்தானிய அரசர்கள் பழங்குடிச் சடங்குகள், வாழ்க்கை முறையில் தலையிட​வில்லை. பிரிட்​டிஷாரின் வருகைக்கு முன், பழங்குடி மக்கள் காடுகளுக்கும் அவர்களின் முன்னோர்வழி வந்த நிலங்​களுக்கும் உரிமை​யுடைய​வர்களாக இருந்​தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x