Published : 04 Oct 2024 06:13 AM
Last Updated : 04 Oct 2024 06:13 AM
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 1,550 தொழிலாளர்கள் வெளியிலும், 300 தொழிலாளர்கள் உள்ளேயும் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாகத் திருவிழாக்கள் காத்திருக்கின்றன. மக்கள் கையில் பணம் புரளும் காலம்.
சாம்சங் சாதனங்கள் அமோகமாகச் சந்தையில் விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. ஆனாலும் பிரச்சினையைச் சுமுகமாக முடித்து, உற்பத்தியில் கவனம் செலுத்த நிர்வாகம் தயாராக இல்லை. தொழிலாளர் துறை அமைச்சர் தலையிட்டு ஒருமுறையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் முன்னிலையில் ஒருமுறையும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் முன்னேற்றம் ஏதும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT