Published : 02 Oct 2024 06:18 AM
Last Updated : 02 Oct 2024 06:18 AM
மனித வரலாற்றில் முதல் முறையாகப் பூமியின் நலத்தை விரிவாக ஆராய்ந்து ‘புவி நலன் சோதனை அறிக்கை’ (Planetary Health Check Report) என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கையை ஓர் ஆய்வுக் குழுவினர் தயாரித்திருக்கிறார்கள். போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சிக் கழகத்தைச் (Potsdam Institute for Climate Impact Research) சேர்ந்த யோஹான் ராக்ஸ்ட்ரோம் என்கிற அறிவியலாளரின் தலைமையில் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
காத்திருக்கும் விபரீதம்: 11,700 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஹோலோசீன் காலக்கட்டத்தில் தட்பவெப்பமும் பொதுவான சூழலும் ஓரளவு நிலையானதாக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் நவீன வேளாண்மையும் நாகரிகங்களும் உருவாகி வளர்வதற்கான சரியான சூழலும் நிலவியது. சுற்றியிருக்கும் இயற்கைக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாமலேயே மனித இனம் முன்னேறுவதற்கு ஏதுவானதாக ஹோலோசீனின் சூழல் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT