Published : 26 Sep 2024 06:12 AM
Last Updated : 26 Sep 2024 06:12 AM
மண்டபங்களில் நிகழும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளின்போது அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்களைக் கவனித்திருக்கிறீர்களா? விருந்தினருக்கான உணவைச் சமைக்கும் சமையல் கலைஞர்கள், பந்தியில் உணவைப் பரிமாறுபவர்கள், விருந்தினர் சாப்பிட்ட பின்னர் இலையை எடுக்கும் பணியாளர்கள் போன்றோரின் உழைப்புதான் சுபநிகழ்வை முழுமைபெற வைக்கிறது.
அமைப்புசாராத் தொழிலாளர்களிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் சத்திரத் தொழிலாளர்களுக்கு என்று நிரந்தர வேலையோ வருமானமோ இல்லை. இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் இல்லை. இவர்களுக்கென்று தனித் தொழிற்சங்கமோ, வாரியமோ இல்லை. அரசுக்குப் புலப்படாத சத்திரத் தொழிலாளர்களின் வலிகளைச் சமூகம் அடையாளம் காண வேண்டியது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT