Last Updated : 25 Sep, 2024 06:18 AM

 

Published : 25 Sep 2024 06:18 AM
Last Updated : 25 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
வேலை நேரம் | சொல்... பொருள்... தெளிவு

ஏர்ன்ஸ்ட் அண்டு யங் (Ernst & Young) பன்னாட்டு நிறுவனத்தின் புணே அலுவல​கத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவால் ஜூன் மாதம் உயிரிழந்​தார். அளவுக்கு அதிகமான பணிச் சுமை காரணமாகத் தன் மகள் உயிரிழந்ததாக அப்பெண்ணின் தாயார் ஏர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானிக்கு நீண்ட கடிதம் ஒன்றைச் சமீபத்தில் எழுதினார். இக்கடிதம் சமூக வலைதளங்​களில் பகிரப்​பட்டு, நாடு முழுவதும் அதிர்​வலையை ஏற்படுத்​தியது. மேலும், இந்தியப் பணியிடங்​களில் வேலை நேரம் சார்ந்த விவாதத்​தையும் இந்நிகழ்வு எழுப்​பி​யிருக்​கிறது.

நீண்ட போராட்டம்: தொழிற்​புரட்சி (1760 முதல் 1830) காலக்​கட்​டத்தில் தொழிலா​ளர்கள் நீண்ட நேரம் பணிச் சுமைக்கு உள்ளாகினர். ஒரு நாளைக்கு 14 மணி நேரத்​துக்கும் மேலாகத் தொழிலா​ளர்கள் வேலை பார்க்க நிர்ப்​பந்​திக்​கப்​பட்​டனர். 19, 20ஆம் நூற்றாண்​டு​களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள், தொழிற்​சங்​கங்கள், பிற தொழிலாளர் அமைப்புகள் ஆகியவை 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்னிறுத்தி மாபெரும் போராட்​டங்களை முன்னெடுத்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x