Published : 24 Sep 2024 06:17 AM
Last Updated : 24 Sep 2024 06:17 AM
‘இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0’ என்ற பெயரில் முந்தைய இணையப் பாதுகாப்புக் கொள்கையைப் புதுப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. காலத்துக்கேற்ப மேம்படுத்த வேண்டியவற்றுள் தொழில்நுட்பமும் ஒன்று. அந்த வகையில், இந்தப் புதிய கொள்கையில் பல வழிகாட்டல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் சாதக பாதகங்களை அலசுவது அவசியம்.
அடிப்படையில், இந்தக் கொள்கையானது தமிழக அரசின் அனைத்துத் துறையினரின் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் கடைப்பிடிக்கப்படும். இதன் மூலம் மக்கள் - அரசின் எண்ணிமத் தரவுகள் (Digital Records) பாதுகாக்கப்படும். இணையத் தாக்குதல்களைத் தடுக்கவும் ஒடுக்கவும் இந்தக் கொள்கையில் விரிவான வழிகாட்டல்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT