Last Updated : 23 Sep, 2024 06:14 AM

 

Published : 23 Sep 2024 06:14 AM
Last Updated : 23 Sep 2024 06:14 AM

ப்ரீமியம்
காவிரிப் படுகை மறந்த நாற்று நடவு

நாற்றுப் பறிப்பும் நடவும் காவிரிப் படுகைக்குக் கிட்டத்தட்ட மறந்து​விட்டது. புழுதியாக உழுது விதையைத் தெளித்து​விடும் இன்றைய சாகுபடி முறை என்பது நாற்பதே ஆண்டு​களில் உருவான மாற்றம். இந்தப் புனல் நாடு இரண்டா​யிரம் ஆண்டு​களாகவே நடவைத் தவிர வேறு முறையை அறியாது. இப்போது நடவை மறந்து மானாவாரிக்குப் பழக்கமான தெளிப்​புக்கு மாறியது. புரட்​சிகளின் தன்மையே இதுதான்; அவை சொல்லிக்​கொள்​ளாமல் வந்து​விடும்.

மிகைப் பேச்சின் கவர்ச்​சிக்காக நான் இப்படிச் சொல்ல​வில்லை. வடகோடி வீராணம் ஆயக்கட்​டிலிருந்து தெற்கு எல்லையான கல்லணைக் கால்வாய் வரை இப்போது தெளிப்பு முறைதான். இதற்குத் ‘தெளி’ என்று ஒரு பெயர்ச்​சொல்லும் மொழியில் சேர்ந்​து​கொண்டது. திட்டுத்​திட்டாக மட்டுமே சில இடங்களில் இன்னும் நடவு இருக்​கலாம். குறுவைக்கும் கோடைச் சாகுபடிக்கும் சேற்று உழவு செய்கிறார்கள். அங்கேயும் நேராகத் தெளித்து​விடும் சேற்று விதைப்பு​தான். இந்த முறை மாற்றத்தை அரசாங்கம் மானியம் கொடுத்து ஊக்கு​விக்க​வில்லை. இது விவசா​யிகள் தாங்களாகவே கண்ட வழி. காவிரிக் கரையின் கலாச்சார வலுவைத்தான் இதற்குக் காரணமாகக் கூற வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x