Published : 18 Sep 2024 06:15 AM
Last Updated : 18 Sep 2024 06:15 AM
இந்தியாவில் நிலவும் காலநிலை தொடர்பான சிக்கலான விஷயங்களைப் பகுப்பாய்வு செய்யவும், கணிக்க முடியாமல் போகும் வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், அதிதீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே அறியவும் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் ‘மிஷன் மெளசம்’ (Mission Mausam) என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2024 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
காலத்தின் கட்டாயம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2022இல் மட்டும் இந்தியாவில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 35% இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்டவை என்பது தெரியவந்தது. இதில் வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களைவிட மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், பருவமழை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT