Published : 12 Sep 2024 06:20 AM
Last Updated : 12 Sep 2024 06:20 AM

ப்ரீமியம்
உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள்!

உள்ளாட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்​படா​விட்டால் என்னென்ன சிக்கல்கள் நேரும் என்பதை - சமீபகால வரலாற்றைச் சொல்லி - நினைவூட்ட வேண்டிய தருணம் இது. காரணம், வருகின்ற 2025 ஜனவரி 6ஆம் தேதியோடு 27 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்​சிகளின் பதவிக் காலம் முடிவடைய இருக்​கிறது. வரும் டிசம்பர் மாதத்​துக்குள் தேர்தல் நடத்தி முடிக்​கப்பட வேண்டும். இந்நிலையில், அந்தத் தேர்தல் நடைபெறுமா அல்லது மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழை நிகழ்த்​தப்​படுமா என்கிற அச்சம் எழுந்​துள்ளது.

தடையின்றி நடந்த தேர்தல்கள்: 1994 முதல் புதிய பஞ்சா​யத்துச் சட்டம் வந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்​களின்படி 1996இல் தமிழ்​நாட்டில் முதலாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கிராமசபை அதிகாரங்கள், மகளிர்/ பட்டியல் சாதியினர் /பட்டியல் பழங்குடி​யினருக்கான இடஒதுக்​கீடு, கிராம அளவிலான திட்ட​மிடு​தலுக்கான அதிகாரங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்​களோடுதான் இந்தப் புதிய உள்ளாட்​சிகள் செயல்​பாட்டுக்கு வந்தன. 1996 முதல் எந்தத் தடையும் இன்றி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று​வந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x