Published : 28 Jun 2018 09:33 AM
Last Updated : 28 Jun 2018 09:33 AM
மக்களின் ஆட்சி…
ஜனநாயகம் என்ற வார்த்தை மக்களால் ஆளப்படுகின்ற ஆட்சி என்ற பொருளிலேயே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தனிநபர் ஆட்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘டிமாக்கிராட்டியா’ என்று முதன்முதலில் பெயர் சூட்டியவர்கள் கிரேக்கர்கள். தற்போது உலகெங் கும் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகக் கோட்பாடு கள் பெரும்பாலானவை, பிரிட்டனைப் பின்பற்றி உருவானவை. ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
சிறப்பு யாதெனில்…
ஜனநாயக ஆட்சி முறையில் குடிமக்களின் உரிமைகள் தெளிவாகவும் முழுமையாகவும் வரை யறுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் என்ற கோட்பாடு மக்களிடம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
பெரிய பலவீனம்…
பெரும்பான்மையினரின் கருத்துகளே ஆட்சிபுரிகின்றன. சிறுபான்மையினரின் நியாயமான கருத்துகள் கண்டுகொள்ளப்படாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது.
சுதந்திர நாடுகளின் ஜனநாயக தர நிலையில், 165 நாடுகளில் இந்தியாவின் இடம். ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகைக் குழுமத்தின் ‘எகானமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்’, 1946-ல் தொடங்கி ஆண்டுதோறும் உலக ஜனநாயகக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுவருகிறது. அதில் 2017-ல் நாம் பெற்றிருக்கும் இடம் இது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் கீழே இறங்கியிருக்கிறோம்.
தேர்தல் நடைமுறைகள், பன்மைத்துவம், குடிமக்கள் உரிமைகள், அரசின் செயல்பாடுகள், மக்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் அரசியல் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முழுமை யான ஜனநாயகம், குறைகள் உள்ள ஜனநாயகம், கலப்பு ஜனநாயகம் மற்றும் எதேச்சதிகார ஜனநாய கம் என்ற நான்கு பிரிவுகளில் நாடுகளைப் பட்டிய லிடுகிறது இந்த அறிக்கை. இந்தியா, குறைகள் உள்ள ஜனநாயகமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட 19 நாடுகளில் மட்டுமே முழுமையான ஜனநாயகம் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT