Last Updated : 28 Jun, 2018 09:34 AM

 

Published : 28 Jun 2018 09:34 AM
Last Updated : 28 Jun 2018 09:34 AM

விளிம்பிலிருந்து மையத்துக்கு: ஒரு மாறுபட்ட இணையதளம்

வி

ளிம்புக்குத் தள்ளப்பட்டோருக்கான மையநீரோட்ட செய்தி ஊடகம் என்ற அறிவிப்புடன் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது ‘டூ சர்க்கிள்ஸ்’ (TwoCircles.net) இணையதளம். ‘ஆதிவாசி’, ‘தலித்’, ‘இந்தியன் முஸ்லிம்’, ‘வுமன்’, ‘யூத்’ என்ற தலைப்பிலான துணைப்பட்டைகளே இந்தத் தளத்தின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் இந்தியாவில் எதிர்கொள்ளும் அன்றாடத்தைப் புகைப்படங்களோடு செய்தியாக வெளியிடும் லாப நோக்கமற்ற இந்த இணையதளம் பாஸ்டனைச் சேர்ந்த கஷிப் உல்-ஹுதாவால் உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்காவில் முஸ்லிம்கள் குறித்த ஊடக அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தை இந்திய ஊடகங்களும் பின்பற்றியது தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும், இணையதளத்தைத் தொடங்குவதற்கு அதுதான் காரணம் என்று ஹூடா கூறியுள்ளார். இஸ்லாம் என்பது அச்சத்துக்குரியதோ, அந்நியமானதோ அல்ல, ஆன்மிக மதிப்பீடுகளைக் கொண்ட மார்க்கம் என்பதைக் காட்டும் முயற்சி இது என்கிறார்.

ரம்ஜான் என்றாலே தொழும் படங்களே வெளியிடப்படும் நிலையில், இஸ்லாமியர்களின் தினசரிச் செயல்பாடுகளினூடாக நோன்புக்கும் அவர்களுக்குமிடையிலான உறவை இதிலுள்ள புகைப்படங்கள் காண்பிக்கின்றன. சாதி எதிர்ப்புப் போராளியும் மராத்தியக் கவிஞருமான சந்தானு காம்ப்ளேயின் அகால மரணத்தையொட்டி அவரைப் பற்றிய செய்திக் கட்டுரை மராத்தியத்தில் இன்னமும் வலுவாக இருக்கும் அம்பேத்கரிய இயக்கத்தைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. திருநபர்கள் பற்றிய போதிய புரிதலோ, பரிவோ அற்று திருநம்பி அக்ஷய் தேவ் தற்கொலை குறித்து ‘பரபரப்பான’ செய்தியை சமீபத்தில் வழங்கிய தமிழ் தொலைக்காட்சி குறித்த ஆங்கில விமர்சனக் கட்டுரையும் இந்த இணையதளத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x