Last Updated : 29 Aug, 2024 06:30 AM

 

Published : 29 Aug 2024 06:30 AM
Last Updated : 29 Aug 2024 06:30 AM

ப்ரீமியம்
நகர்மயமாதல் தலித் மக்களை விடுவித்துள்ளதா?

நமது அண்டைப் பகுதி​களில் உள்ள பெயர்ப் பலகைகளைப் பார்த்தாலே இந்திய நகரங்​களில் வெளிசார்​தன்​மையின் முதன்​மையான மொழி சாதிதான் என்பது தெரிந்​து​விடும். இத்தகைய வீழ்ச்​சிகளையும் தாண்டி, கிராம வாழ்க்கையை நிராகரித்து தலித் மக்கள் நகரங்களை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்​தினார். இந்தியக் கிராமம் என்பது ‘இந்து சமூகப் படிநிலை செயல்​படும் ஆலை’ என்று கூறிய அம்பேத்கர், கிராமம்தான் சாதியைப் பற்றிப் புரிந்​து​கொள்​வதற்கு மிகச் சரியான இடம் என்று வாதிட்​டார்​.

அதே நேரம், இந்தியக் கிராமத்தைச் சுயசார்பு கொண்ட, சமத்து​வமும் நியாயமும் அகிம்​சையும் நிறைந்த அமைப்​பாகப் பார்த்த காந்தி, கிராம-சுயராஜ்யம் வழியாக மையத்​திலிருந்து அதிகாரம் பகிர்ந்​தளிக்​கப்பட வேண்டும் என்று வாதிட்​டார். இதைக் கடுமையாக எதிர்த்த அம்பேத்கர், இந்தியக் கிராமத்தைச் சிறந்​த​தாகக் கருதுவது கிராமப்புற மக்களை மேம்பட்​ட​வர்​களாகக் கருதும் காலனியச் சிந்தனை அல்லது சாதி ஆதிக்​கத்தைத் தக்கவைக்கும் இந்துக்​களுடைய விருப்​பத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x