Published : 23 Aug 2024 06:10 AM
Last Updated : 23 Aug 2024 06:10 AM
முருகன் எவன்? முருகையுடையவன் முருகன். முருகு என்றால் என்ன? முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை மணம், இளமை, கடவுள்தன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழு முதற்பொருளை அழைத்தது வியக்கத்தக்கது.
இயற்கை மணமும், மாறா இளமையும் எல்லாப் பொருளையும் கடந்து ஒளிருந்தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற்கு இடம்பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்கும்போது அவர்களது கூர்ந்த மதி புலனாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT