Published : 11 Aug 2024 07:22 AM
Last Updated : 11 Aug 2024 07:22 AM

ப்ரீமியம்
திருமெய்யம் ஒப்பந்தம்

புதுக்​கோட்டைக்கு அருகில் உள்ளது திருமெய்யம். பொதுக் காலம் 7 - 8ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர்க் குன்றில் மூன்று குடைவரைகள் குடையப்​பட்டன. ஒன்று, குன்றின் மேற்பகுதியில் அமைய, கீழ்ப்​பகுதியில் சிவபெரு​மானுக்கு ஒன்றும் விஷ்ணுவுக்கு ஒன்றுமாக இரண்டு குடைவரைகள் அருகருகே உருவாயின. தமிழ்​நாட்​டளவில் பள்ளி​கொண்ட பெருமாளுக்குப் பல குடைவரைகள் இருந்த​போதும் மெய்யம் குடைவரைதான் அளவிலும் உடனிருப்​பாளர்​களின் எண்ணிக்​கை​யிலும் பெரியது. தாய்ப் பாறையிலான பள்ளி​கொண்ட​வருடன் செய்தமைத்​தவராய் நின்றருளிய பெருமாளும் இங்குள்​ளார்​. சிவபெருமான் குடைவரையும் லிங்கோத்பவர் வடிவத்தால் தமிழ்​நாட்டின் தன்னிகரற்ற படைப்பாய் ஒளிர்​கிறது. இரண்டும் சமயப்பொறை நோக்குடன் அருகருகே அமைக்​கப்​பெற்று, வாகான வருவாய் திட்ட​மிடப்​பட்​டிருந்தும் வருவாய்ப் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற சூழல்கள் குழப்​பங்​களாய்த் தொடங்கி, சச்சரவு​களாய் வெடித்து வழிபாட்டு நிறுத்​தத்தில் முடிந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x