Published : 11 Aug 2024 07:38 AM
Last Updated : 11 Aug 2024 07:38 AM
பிரபல சமூக விஞ்ஞானியான ஜேம்ஸ் சி.ஸ்காட் 2024 ஜூலை 19 அன்று, தனது 87ஆவது வயதில் காலமாகிவிட்டார். நியூஜெர்சியில் பிறந்த இவர், ஒன்பது வயதில் தன்னுடைய தந்தையை இழந்து, பின் குவாக்கர்ஸ் என்னும் நண்பர்கள் சமய சபை நடத்தும் பள்ளியில் பயின்றார். யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, பின் யேலுக்குத் திரும்பி 45 ஆண்டுகள் அரசியல், மானுடவியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்ப்பாளராக அறியப்பட்ட இவர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இனவியல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, ஒரு மலேசியக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி விவசாயிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். 1958-59 ஆண்டுகளில் ரோட்டரி நிதிநல்கை உதவியுடன் மயன்மார் சென்று, அங்கு ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய அரசியல் சித்தாந்தத்தை ‘Two Cheers for Anarchism’ (அதிகார மையங்களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்துதல்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிபணியாமல் இருப்பதே பின்னாள்களில் எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட மக்களைத் தயார் படுத்தும் என நம்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT