Last Updated : 30 Jul, 2024 06:20 AM

2  

Published : 30 Jul 2024 06:20 AM
Last Updated : 30 Jul 2024 06:20 AM

ப்ரீமியம்
பனங்கள் விற்பனையை அரசே தொடங்கலாமா?

‘உடல் ஆரோக்​கியத்து​க்கு உகந்த பனை மரக் கள்ளை நிபந்​தனையின்றி விற்க அரசு அனுமதிக்க வேண்​டும்’ - புதுக்​கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்​புச் செயலாளர் நடராஜன், மதுரை உயர் நீதிமன்​றத்​தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்​பிட்டிருக்​கும் வார்த்​தைகள் இவை.

சங்க காலம் தொடங்கி, தற்போது வரைக்​கும் கள் மருந்​தாகவும் உணவாகவும் இருப்​பதைத் தனது மனுவில் அவர் குறிப்​பிட்டுள்ளார். இந்த வழக்கு ஜூன் 27இல் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்​முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பாலசுந்​தரம், கள்ளச் சாராயம் குடித்த பலர் சமீபத்​தில் பலியாகியுள்​ளதைச் சுட்டிக்​காட்டி, இது போன்ற சம்பவங்​களைத் தடுக்கப் பனை மரக் கள் விற்​பனையை அனுமதிக்க வேண்​டும் என வாதாடினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x