Published : 24 Jul 2024 06:18 AM
Last Updated : 24 Jul 2024 06:18 AM
‘மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவை ‘அடிமைத்தனத்தின் மிச்சம்’ என்கின்றன ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள். இத்தகைய இழிவில் பன்னெடுங்காலமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள மக்களை மீட்க மகத்தான போராட்டங்களை வேறு யாரையும்விட அதிகமாக முன்னோடி கம்யூனிஸ்ட்டுகள் 1950களில் நடத்தியிருக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மனிதக் கழிவு அகற்றும் மனிதர்கள் மத்தியிலிருந்து எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல்லில் உருவானார். அவர் ஏ.பாலசுப்ரமணியன் என்னும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் அரவணைப்போடு வீரமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT