Last Updated : 22 Jul, 2024 06:13 AM

 

Published : 22 Jul 2024 06:13 AM
Last Updated : 22 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் - 22: இன அழிப்புக்குத் துணை நிற்கும் வல்லரசு

சில நாள்களுக்கு முன்பாக உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனை மீது ரஷ்ய ராணுவம் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியது. போர் விதிகளுக்கு முற்றிலும் மாறான, சற்றும் மனிதத்தன்மையோ இரக்க உணர்வோ அற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக 32க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகின. மேலும், பொதுமக்கள் பலரும் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

துரோகமும் கோழைத்தனமும்: இத்தகைய கொடிய தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் பலவும், குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்றவை தங்களின் வன்மையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, ‘மனிதத்தன்மையை உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கும்’ அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் மீது கொடுந்தாக்குதல் நிகழ்த்துவது போர் நெறிமுறைகளுக்கு எதிரானது. இது ரஷ்யாவின் வெறித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது” என்று திருவாய் மலர்ந்தார். அவரது இந்தக் கரிசனம் பாராட்டத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x