Published : 01 Jul 2024 06:18 AM
Last Updated : 01 Jul 2024 06:18 AM
உலகில் முதல் உடனுறைப் பல்கலைக்கழகம், 4ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம்தான். இத்தகைய பெருமிதத்துடன் கல்வியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நாம். ஆனால், ‘டைம்ஸ்’ வெளியிட்டுள்ள உலகத் தரவரிசை-2024 பட்டியலில் 214ஆம் இடத்தில்தான் இந்தியப் பல்கலைக்கழகம் நுழைய முடிகிறது. எண்ணிக்கை அளவில் முதல் இடத்தில் இருக்கும் நாம் ஏன் தரத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்?
கல்வியும் சுதந்திரமும்: சுதந்திரம் என்பது அனைவரின் தார்மிக உரிமை. அது மனித நேயத்தின் அடித்தளம். “மற்றவர்களுக்குச் சுதந்திரத்தை மறுப்பவர்கள் சிறந்த அடிமைகள்” என்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. சுதந்திரத்தின் உன்னதத்தை இதைவிட மேன்மையாக வேறு யாரும் சொன்னதாக எனக்குப் புலப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT