Published : 17 Jun 2024 05:55 AM
Last Updated : 17 Jun 2024 05:55 AM
இந்தியாவில் குழந்தைப்பேறு வருடந்தோறும் குறைந்துவருவதாக ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்விதழ் தெரிவிக்கிறது. ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் ‘மொத்தக் கருவுறுதல் விகிதம்’ (Total Fertility Rate - TFR) எனப்படுகிறது. இது ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும். இது 1950இல் இந்தியாவில் 6.18 ஆக இருந்தது. 2021இல் 1.91 ஆகக் குறைந்துவிட்டது. மேலும், இது 2050இல் 1.3 ஆகவும், 2100 இல் 1.04 ஆகவும் குறையக்கூடும் என்கிறது இந்த ஆய்விதழ்.
நாட்டில் மக்கள்தொகை நிலையாக இருக்க, ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும். இது ‘மாற்று நிலை’ (Replacement level) எனப்படுகிறது. இறக்கும் மக்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று சொல்லும் விகிதம் இது. இந்தியாவில், இதன் அளவு 2.1 ஆக இருக்க வேண்டும். இப்போது இந்த அளவு குறைந்துவிட்டதால், இனி மக்கள்தொகையும் குறைந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT