Published : 09 May 2018 08:56 AM
Last Updated : 09 May 2018 08:56 AM
நீ
ட் விவகாரத்தில் என்ன குளறுபடி என்பது குறித்துப் பொதுவெளியில் சரியான தகவல் கள் இல்லை. ஆனால், குளறுபடி இருக்கிறது என்பது இரண்டு பக்கமும் ஒப்புக்கொண்ட விஷயம். ஒரு சில மத்திய அரசு ஆதரவாளர்களிடமிருந்து ‘படிக்கணும்னா எங்கே போட்டாலும் போகணும், வெளிநாட்டுல வேலை கிடைச்சா போகலையா?’ என்பது போன்ற பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அதில், கள நிலவரம் புரியாத ஒரு அறியாமையைத்தான் காண்கிறேன்.
கடந்த ஆண்டு, கோபிக்கு அருகே அந்தியூரில் ப்ளஸ் டூ படிக்கும் அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்காக வா.மணிகண்டன் ஒருங் கிணைத்த வழிகாட்டு நிகழ்வில் கலந்துகொண்டேன். “உங்களில் எத்தனை பேர் வீடுகளில் இணையம் பார்க்க வசதி இருக்கிறது?” என்று கேட்டேன். அந்த வகுப்பில் 100 மாணவர்களுக்குப் பக்கம் இருப்பார்கள். மூன்று கைகள் மட்டும் உயர்ந்தன. மாணவிகள் பக்கமிருந்து ஒன்றுகூட இல்லை. “மொபைல் போனில் இருக்குமே” என்றபோது, சிலர் மட்டும் “இருக்கு… ஆனால் ப்ளஸ் டூ படிக்கும்போது தொட விட மாட்டார்கள்” என்றனர். பிரவுசிங் சென்டர் என்றெல்லாம் அந்த ஊரில் எதுவும் இல்லை. இது நடப்பது ஜியோ யுகத்தில்.
இத்தனைக்கும் நான் கிராமத்தில் படித்து வந்தவன். ஆனால், 20 ஆண்டுகள் நகர வாழ்க்கை என்னை கிராமத்திலிருந்து சற்றே நகர்த்தி விட்டது. ‘நல்லா படிச்சா மேல படிக்க வெப்போம். இல்லைன்னா, இருக்கவே இருக்கு மளிகைக் கடை’ என்ற தொடர் அபாயத்துடன் பள்ளிப் படிப்பை முடித்தவன் நான்.
எனக்கு ஒரு தோழி இருந்தாள். தந்தை இல்லை. அம்மாவின் உழைப்பில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவளும் அம்மாவுக்கு உதவுவாள். ஓரளவு நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தாள். கல்லூரிகள் அத்தனையும் அரை மணி, ஒரு மணி பயணத் தொலைவில் இருக்கின்றன. கல்லூரியில் சேர்ந்தால் அம்மாவுக்கு உதவ முடியாது என்று படிப்பையே நிறுத்திவிட்டார்கள். இப்போது காலம் நிறைய மாறியிருந்தாலும் சமூக பொருளாதார இன்னபிற காரணங்களுக்காக ஒரு சிறிய அசவுகரியம் வந்தாலும் “நீ படிச்சது போதும்” என்று சொல்லும் பெற்றோர் இப்போதும் இருக் கிறார்கள். அதிகாலை எழுந்து தீவனம் அறுத்துவந்து, சாணி அள்ளிப் போட்டுவிட்டுப் பள்ளிக்குத் தயாராகிச்செல்லும் ப்ளஸ் டூ மாணவ - மாணவியரும் இருக்கிறார்கள்.
வசதி உள்ளவர்கள் எப்படியும் எங்கும் சென்று எழுதுவார்கள். சற்று சிரமப்பட்டால் உதவிகள் பெற்று வசதி இல்லாதவர்களும் எழுதிவிட முடியும். ஆனால், நாம் தேவையின்றி உருவாக் கும் உங்கள் பார்வையில் ‘சிறிய’ அந்தச் சிரமம் ஒரே ஒரு கடைக்கோடி மாணவனின் அல்லது மாணவியின் எதிர்காலத்தை உடைத்தாலும் அது பெரிய பாவம். அவன் சந்ததிக்கே நாம் செய்யும் கூட்டுத் துரோகம். மத்திய அரசு - மாநில அரசு, சிபிஎஸ்இ அதிகாரிகள், உச்ச நீதிமன்றம் என்று அத்தனை பேரும் முனைந்து செய்ய வேண்டியது அந்தச் சிரமங்களைக் களைவதுதான்; உருவாக் குவது அல்ல!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT