Published : 13 Jun 2024 07:19 AM
Last Updated : 13 Jun 2024 07:19 AM
மோடி தலைமையிலான முந்தைய இரண்டு அரசுகள் எதிர்கொண்ட விமர்சனங்களில் முக்கியமானது, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காமல் அரசு நடந்துகொள்வதாகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுந்த குமுறல்கள்தான். இந்த முறை ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய மாநிலக் கட்சிகளின் துணையுடன்தான் பெரும்பான்மையை எட்ட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பாஜக, இனியேனும் மாநில அரசுகளை - குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை - அரசமைப்புச் சட்ட விழுமியங்களின்படி சரிசமமாக நடத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாநில அரசுகளுடன் மோதல்: பாஜக ஆளும் மாநிலங்களை ‘இரட்டை இன்ஜின் அரசு’ என்னும் அடைமொழியுடன் ‘கவனித்துக்கொண்ட’ மோடி அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துவந்தது மறுக்க முடியாதது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் அவற்றில் முக்கியமானவை. ஜிஎஸ்டி நிதிப் பகிர்வு, பேரிடர் நிவாரண நிதி, 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடன் ஏற்பட்ட பிணக்கால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும்
அளவுக்கு நிலவரம் மோசமாக இருந்தது. இவ்விவகாரத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்ட உச்ச நீதிமன்றம், “மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT