Published : 20 May 2018 09:13 AM
Last Updated : 20 May 2018 09:13 AM
‘க
றக்கறது கா(ல்) படி; ஒதைக்கறது பல்லு போக!’ நாட்டு மாடுகளைப் பற்றி இப்படியொரு சொலவடை உண்டு. இதை மனதில் வைத்தே கொங்குப் பகுதி விவசாயிகள் நாற்பதாண்டு காலமாக நாட்டு மாடுகளைக் கைவிட்டு, கலப்பின மாடு வளர்ப்புக்கு மாறி இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம், ‘உதைபட்டு பல்லு போனாலும் நாட்டு மாடுகளை வளர்த்தியே தீரணும்’ என்று பிடிவாதம் பூண்டுவிட்டார்கள் போலும். அந்த அளவுக்கு நாட்டு மாடுகளை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏன்..?
‘நாட்டு மாடு கோமியம் கிடைக்கும். ஆடு, நாட்டு மாட்டின் உரம் கிடைக்கும். புதுமனை மற்றும் கோ-பூஜைக்கு நாட்டு மாடு வழங்கப்படும். சுத்தமான நாட்டுப் பசும்பால் கிடைக்கும்’ - இப்படியெல்லாம் கோவை புதூர் பகுதியில் விளம்பரப் பலகைகள் முளைத்திருக்கின்றன. இப்படி விளம்பரப்படுத்தும் அளவுக்கு நாட்டு மாடுகள் மீது அப்படி என்ன திடீர் கரிசனம்?
“நாலு வருஷம் முன்னாலதான் நாட்டு மாடு வளர்த்தற ஆசையில எங்க வூட்டுக்காரர் ஒரு நாட்டு மாடும், மூணு கன்னுக்குட்டியும் வாங்கிட்டு வந்தார். அதுதான் இப்ப 20 உருப்படியாவும், 4 கறவையாகவும் பெருகியிருக்கு.பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, நெல்லந்தவுடு, பச்சை சோளத்தட்டுன்னு நிறைய செலவு இருக்கு. ஒரு மாடு ஒரு லிட்டர்லேர்ந்து மூணு லிட்டர் வரைக்கும் கறக்கும். கறந்த சூட்டோட துளி தண்ணி கலக்காம லிட்டர் 100 ரூபாய்க்குத் தர்றோம். நாட்டு மாட்டுப்பாலே வேணும்னு நிறைய பேர் வந்து கேட்கிறாங்க. முக்கியமா நாட்டுப் பசும்பாலைக் குடிச்சுப் பழகின குழந்தைங்க திரும்ப பாக்கெட் பாலையோ, கலப்பின மாட்டுப்பாலையோ கொடுத்தா குடிக்க மாட்டேங்குது’’ என்கிறார் கோவைபுதூர், ஐஸ்வர்யா நகர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT